சேலத்தில் கணக்கில் வராத ரூ.10¾ லட்சம் சிக்கிய விவகாரம்: 5 பேர் மீது வழக்கு
சேலத்தில் கணக்கில் வராத ரூ.10¾ லட்சம் சிக்கிய விவகாரத்தில் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உதவி இயக்குனராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் சேலம் மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள், நாமக்கல் மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள் உள்ளன.
இந்தநிலையில், கடந்த 30-ந் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி செயல் அலுவலர்கள் அனைவரும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் வசூலித்து அதை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
ரூ.10¾ லட்சம் பறிமுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வந்து சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.10¾ லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குனர் கண்ணன் உள்பட 14 அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பறிமுதல் செய்த ரூ.10¾ லட்சம் யாருடையது? என அதிகாரிகளிடம் போலீசார் கேட்டபோது, யாரும் அந்த பணத்திற்கு சொந்தம் கொண்டாடவில்லை. இந்தநிலையில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணத்தை நேற்று முன்தினம் சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
5 பேர் மீது வழக்கு
இதனிடையே, அலுவலகத்தில் இருந்த பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையின்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் வற்புறுத்தியதால் தான் லஞ்சம் கொடுக்க வந்ததாக சிலர் எழுத்து பூர்வமாக வாக்குமூலம் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் சேலம் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், கண்காணிப்பாளர் நாகராஜ், கணினி இயக்குனர் நாகலிங்கம், எழுத்தர் சாந்தி, இளநிலை உதவியாளர் செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேசமயம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் செயல் அலுவலர்கள் லஞ்சம் கொடுக்கும் காட்சி பதிவாகி இருந்தால் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், லஞ்சம் கொடுத்த செயல் அலுவலர்கள் மீது புகார் அளித்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.