கிணற்றில் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
பேராவூரணி அருகே கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் அதே பகுதியில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் ராஜேந்திரன் (35) என்பது தெரியவந்தது.
விசாரணை
இதைத்தொடர்ந்து போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.