விருத்தாசலம் அருகே வாலிபர் அடித்துக் கொலை
விருத்தாசலம் அருகே வாலிபரை அடித்துக் கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூரில் ஓம் சக்திகோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இதற்கிடையே சத்தம் கேட்டு, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்த போது, அங்கு உண்டியல் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கமல் என்கிற கமல்ராஜ் (வயது 27) என்பவர் தான் உண்டியலை திருடியிருக்கலாம் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் சவுந்தர்ராஜன் (30), திருநாவுக்கரசு (50) ஆகிய 2 பேரும் கமல்ராஜியின் வீட்டுக்கு சென்று, இதுபற்றி அவரிடம் கேட்டனர். அப்போது கமல்ராஜிக்கும் சவுந்தர் ராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கமல்ராஜை சவுந்தர் ராஜன் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், கமல்ராஜ் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கமல்ராஜை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சவுந்தர்ராஜன், திருநாவுக்கரசு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், கொலைசெய்யப்பட்ட கமல்ராஜியின் உறவினர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, கமல்ராஜியின் சாவுக்கு நீதிகேட்டும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதி கிடைக்க பரிந்துரைக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் திருமாறன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் பாலஅறவாழி, கருப்புசாமி, தொகுதி செயலாளர் அய்யாயிரம், ஒன்றிய செயலாளர் மணிவாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வட்ட தலைவர் அசோகன், வட்ட செயலாளர் சிவஞானம் ஆகியோர் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அந்த மனுவில், நேற்று முன்தினம் இரவு கமல்ராஜை அதேபகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், திருநாவுக்கரசு மற்றும் சிலர் வீட்டுக்கு சென்று தாக்கி உள்ளனர். இதில் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த கமல்ராஜியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிறுவரப்பூர் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.