கி.வீரமணி எழுதிய நூல் வெளியீட்டு விழா

கி.வீரமணி எழுதிய ‘டாக்டர் அம்பேத்கரின் புத்த காதலும், புத்தக காதலும்’ நூல் வெளியீட்டு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது

Update: 2018-01-03 22:00 GMT
சென்னை, 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய ‘டாக்டர் அம்பேத்கரின் புத்த காதலும், புத்தக காதலும்’ நூல் வெளியீட்டு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை தாங்கினார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் ‘டாக்டர் அம்பேத்கரின் புத்த காதலும், புத்தக காதலும்’ நூலை எஸ்.மோகன் வெளியிட, அதன் பிரதிகளை குமரி அனந்தன், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.

நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களுக்கு ‘சாதி ஒழிப்பு நூல்’ எனும் நூலை கி.வீரமணி அளித்தார். 

மேலும் செய்திகள்