மோட்டார் வாகன சட்ட திருத்தம்: போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துராஜ் கலந்து கொண்டு பேசினார். மேலும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் தனசாமி, பொருளாளர் பெருமாள், அரசு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி பால்ராஜ் உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சிறு தவறுகளுக்கும் ஓட்டுனர் உரிமத்தை பறிக்கக் கூடாது. கார், சிறிய வாகன நிறுத்தம் இடங்களில் டிரைவர்களுக்கு ஓய்வறை, கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.