குடிநீர் வழங்காததை கண்டித்து நீரேற்று நிலையத்துக்கு பூட்டு போட்டு பெண்கள் போராட்டம்
குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்து திருச்செங்கோடு அருகே நீரேற்று நிலையத்துக்கு பூட்டு போட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சத்திநாயக்கன்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் பிரிவு ரோடு பகுதிக்கு கடந்த 129 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. நேற்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த சுமார் 50 பெண்கள் காலிக்குடங்களுடன் சத்திநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கிருந்து குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்திற்கு சென்று அங்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். நீரேற்று நிலையத்தின் முன் சமையல் செய்யும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கோமதி, செயலாளர் அலமேலு உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து சங்க துணைதலைவர் கோமதி கூறும்போது, சத்திநாயக்கன்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் பிரிவு ரோடு பகுதிக்கு கடந்த 129 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் ஆகியவற்றில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம் அதற்கு பின்பும் குடிநீர் வினியோகம் செய்யப் படவில்லை. சாலைமறியல் செய்யப்போவதாக ஒரு வாரத்திற்கு முன் போர்டு வைத்தோம், அதையும் பொருட்படுத்தவில்லை. எனவே எங்களுக்கு பயன்படாத குடிநீர் உந்து நிலையத்திற்கு பூட்டு போட்டோம். எங்களுக்கு குடிநீர் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம், என்றார்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த துணை தாசில்தார் ஆனந்தன், ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், தோக்கவாடி குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு மணி நேரத்தில் குடிநீர் வழங்கப்படும், என உறுதி அளித்தனர்.
இதையடுத்து பெண்கள் அமைதியாக இருந்த நிலையில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் தரக்குறைவாக பேசியதால் அவரை பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் ஒரு மணி நேரத்தில் குடிநீர் வினியோகம் தொடங்கியதால் போராட்டம் கை விடப்பட்டது.