சத்துணவு ஊழியர் சங்கக்கூட்டம் சிவகங்கையில் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

Update: 2018-01-03 21:30 GMT

சிவகங்கை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் பொருளாளர் பானுமதி, மாவட்ட நிர்வாகிகள் சீமைச்சாமி, முத்துக்குமார், பாண்டி, பாலசுப்பிரமணியன், கோமதிகண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், சத்துணவு திட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாமல் சத்துணவு மையங்கள் மூடப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உணவு மானியத்தை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(வெள்ளிக்கிழமை) சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்