ராணுவ டெப்போக்களில் 465 வேலை
ராணுவ டெப்போக்களில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு 465 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
10-ம் வகுப்பு தகுதி
இது பற்றிய விவரம் வருமாறு:-
ராணுவ ஆயுதக் கிடங்கு டெப்போக்களில் ஒன்று 27 பீல்டு அம்யூனிசன் டெப்போ. இங்கு உதவியாளர், லோயர் டிவிஷன் கிளார்க், தீயணைப்பு வீரர், டிரேட்ஸ்மேன், எம்.டி.எஸ். பணிக்கு 291 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். அதிகபட்சமாக டிரேட்ஸ்மேன் பணிக்கு மட்டும் 266 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களே விண்ணப்பிக்க முடியும்.
பட்டப்படிப்பு படித்தவர்கள், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பிளஸ்-2 படித்தவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள் டிரேட்ஸ்மேன், பயர்மேன், எம்.டி.எஸ். பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பலாம். அதில் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் தபால் முறையில் 27 Field Ammunition Depot, PIN 909427, C/O 56 APO என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 22-12-2017 அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல 36 பீல்டு அம்யூனிசன் டெப்போவில் டிரேட்ஸ்மேன் மேட், தீயணைப்பு வீரர், எம்.டி.எஸ்., போன்ற பணிகளுக்கு 174 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். 25 வயதுக்கு உட்பட்ட 10-ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். டிராப்ட்ஸ்மேன் சிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றவர்கள், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் பிளஸ்-2 படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன.
அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் Ministry of Defence, 36 Field Ammunition Depot, Pin 900484 C/O 56 APO என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும்.
இதற்கான அறிவிப்பு டிசம்பர் 16-22-ந் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. முழுமையான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.