புதிய மசோதா: அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவத்துறை?
இந்தியா ஜனநாயக பிரதிநிதித்துவநாடு. கடந்த 60 வருடங்களாக இயங்கி வரும் இந்திய மருத்துவ கவுன்சில் இந்தியாவின் மருத்துவகல்வி, மருத்துவர்கள் கோட்பாடு இவைகளை கண்காணித்து வருகிறது.
பேராசிரியர் ஆ.ஜெயலால் தலைவர், இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு
இந்திய மருத்துவ கவுன்சில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும், மாநில மருத்துவ பிரதிநிதிகளை கொண்டு செயலாற்றும் தன்னாட்சி அமைப்பு ஆகும்.
இந்த ஜனநாயக தன்னாட்சி அமைப்பை கலைத்து விட்டு மத்திய அரசின் நியமன உறுப்பு அதிகாரிகளை கொண்டு இயங்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி முறையை கண்காணிக்கும் இந்த அமைப்பில் பெரும்பாலும் மருத்துவர் அல்லாத பிற துறையை சார்ந்தவர்கள் நியமிக்க பட இருக்கிறார்கள். இது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். மேலும் மருத்துவ கல்வி தரத்தை குறைக்கும் ஒரு சர்வாதிகார செயல். இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவர்கள் இன்று மருத்துவ சேவையில் உலகம் போற்றும் வண்ணம் உயர்ந்துள்ளனர். எனவே மீண்டும் ஜனநாயக பிரதிநிதித்துவ மருத்துவர்களை கொண்ட அமைப்பாகவே இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
இந்த மசோதாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின்பு ஒரு தகுதித்தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 4½ ஆண்டுகள் படித்து பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்று, ஒரு ஆண்டு பயிற்சி முடித்த பின்பும் மருத்துவர் ஆக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதில் மாநில மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த தேர்வுமுறை. மத்திய அரசின் கல்லூரிகளில் (எய்ம்ஸ்.ஜிப்மர் ) பயிலும் மாணவர்களுக்கு தேர்வு இல்லை. அது போல் தற்போது நடைமுறையில் உள்ள ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து படித்துவரும் மாணவர்களுக்கு உள்ள தேர்வு இனி இல்லை. இதில் பெரும்பாலும் கிராம புறங்களில் உள்ள மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படுவர். மேலும் கிராமங்களில் மருத்துவர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏற்கெனவே உள்ள நடைமுறைபடி பல்கலைக்கழகதேர்வுகளை ஒருமுகபடுத்தி இந்த தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி என்பன. ஒவ்வொரு மருத்துவ சிகிச்சையும் தனிச்சிறப்பு பெற்றது. ஒவ்வொரு பிரிவுக்கும் பட்டப்படிப்பு உள்ளது. இந்நிலையில் இந்த மசோதா ஆயுர்வேதா, சித்தா படித்தவர்களும் அலோபதி சிகிச்சை செய்ய வழி வகுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாறு பட்டம் படித்த ஆசிரியர் கணித பாடம் எடுப்பது போல ஆயுர்வேதா மருத்துவம் படித்த மருத்துவர் அலோபதி சிகிச்சை செய்வது அமையும். அரசு மற்ற சிகிச்சை முறைகளை ஊக்குவிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் எந்த ஒழுங்குமுறையுமின்றி மருத்துவ கலப்படம் செய்வது பல பக்க விளைவுகளையும், பாதிப்பையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் என்பதால் எதிர்க்கிறோம்.
மத்திய அரசின் இந்த புதிய மசோதா தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு தனியார் மருத்துவ கல்லூரி தொடங்க இந்திய மருத்துவ கவுன்சிலின் குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஊழியர்களை நியமனம் செய்யவேண்டும். அதனை பரிசோதனை செய்து உறுதிசெய்த பின்பு தான் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்படும்.
புதிய மசோதாவின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வசதிகளை செய்வோம் என உறுதிமொழி அளித்தாலே மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்படும். அரை குறையான இந்த கல்லூரிகளில் மருத்துவ மாணவர்கள் பயில வேண்டும். தற்போது உள்ள ஆண்டுதோறும் மருத்துவ கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யபடுவது நிறுத்தப்படும். தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்கள் இஷ்டம் போல் மருத்துவ மாணவர் எண்ணிக்கையை உயர்த்தலாம்.
இக்கல்லூரிகளின் மீது அதிக பட்சமாக புகார் தெரிவிக்கப்பட்டால் இந்த ஆணையத்திற்கு ரூ.5 கோடிமுதல் 100 கோடி வரை அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கப்படும். அபராத தொகையை கட்டிவிட்டு 3 ஆண்டுகளுக்கு கல்லூரி தொடர்ந்து செயல்படலாம். இது எந்த அளவிற்கு மருத்துவக்கல்வியின் தரத்தை குறைக்கும் என்பதை நாம் உணரலாம்.
தற்போது உள்ள ‘நீட்’ தேர்வு முறையில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் சேர, கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்கிறது. இந்த மசோதாவின் படி இந்த கல்விகட்டணம் தனியார் கல்லூரிகளாலேயே நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இத்தகைய தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்காக கொண்டு வரும் இந்த ஜனநாயக விரோத மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்.
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் இந்தியாவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவராக பணி செய்ய முடியும். அது போல் மேல்நாட்டு பல்கலைக்கழகங்களோ, கல்லூரிகளோ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இல்லாத பட்டயபடிப்புகளை இந்தியாவில் தொடங்க முடியாது. இந்த மசோதா மேலை நாட்டில் படித்தவர்களுக்கும, மேலை நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இந்தியாவில் பணிபுரியும் அங்கீகாரம் அளிக்கிறது.
மருத்துவ சேவை மாநிலம் சார்ந்தது. மாநிலங்களின் தேவைகள் மாறுபடுகிறது. ஆனால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லாது ஒட்டு மொத்த மருத்துவ கல்வியையும் நிர்ணயிக்கும் உரிமையை மத்தியஅரசின் கைப்பாவை அமைப்பிடம் வழங்கும் இந்த தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. மருத்துவ கலப்படம் ஆவதை ஆதரிக்கிறது. தனியார் மயமாக்குதலை ஊக்குவிக்கிறது. கிராமபுற மருத்துவர்களை பாதிக்கும் தகுதி தேர்வினை கொண்டு வருகிறது. எனவே இந்திய மக்களின் நலன் கருதி, அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மருத்துவமாண்பை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவை எதிர்த்து நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் இந்திய மருத்துவசங்கம் செய்தது. தொடர்ந்து மத்திய அரசு இந்த மசோதாவை பின் வாங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.