உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சமயபுரம் அருகே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய கோரி நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் ஒன்றியம் இருங்களூர் ஊராட்சி மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருங்களூர் சோதனைசாவடி அருகே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்டுமானப்பணியின்போது, ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்தது. இதை தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தருமாறு வாரியத்தி்ன் சார்பாகவும், ஊராட்சியின் சார்பாகவும் பலமுறை கேட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று தெரிகிறது. இதன் காரணமாக புறத்தாக்குடி அண்ணாநகர், வடக்கு செபஸ்தியார் கோவில் தெரு மற்றும் மேட்டு இருங்களூரில் உள்ள நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் செல்லவில்லை. கடந்த 12 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்றும் நடவடிக்கை எடுக்காததால் மேட்டு இருங்களூர் பகுதியை சேர்ந்த மக்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் மற்றும் இருங்களூர் ஊராட்சி செயலாளர் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, உடனடியாக குடிநீர் கிடைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.