உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு
கறம்பக்குடி ஒன்றியத்தின் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி நடந்து உள்ளதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 16 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 2 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அடங்கியுள்ளன. இந்தநிலையில் வார்டு சீரமைப்பில் வார்டுகளை சேர்ப்பது, இணைப்பது தொடர்பாக பல குளறுபடிகள் நடைபெற்று உள்ளதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். குறிப்பாக ஒன்றியக்குழு 16-வது வார்டில் திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, இலைகடிவிடுதி ஊராட்சிகள் அடங்கியிருந்தன.
தற்போது அதில் கரு.கீழ்தெரு ஊராட்சியை சேர்ந்த 1600 வாக்காளர்களை புதிதாக சேர்த்துள்ளதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் மற்ற ஊராட்சி ஒன்றிய வார்டுகளை சேர்த்தல், இணைத்தல் குறித்து பலரும் ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர்.
இதேபோல் கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளும் மாற்றி அமைக்கப்பட்டு வார்டு எண்களும் மாறி உள்ளது. பேரூராட்சி 8-வது வார்டில் இருந்த புளியஞ்சோலை பகுதியை தட்டாவூரணி, நரங்கியப்பட்டு வார்டுகளுடன் இணைத்திருப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர். ஒரே வீதியில் உள்ள வாக்காளர்களை 2,3 வார்டுகளில் இணைத்து குளறுபடி நடந்து உள்ளதாகவும், சம்பந்தம் இல்லாத பகுதிகள் வார்டுகளில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி அரசியல் கட்சியினரும் புகார் செய்துள்ளனர். வார்டு சீரமைப்பு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டு நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.