அறிவியல் முகாமில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்
அறிவியல் முகாமில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றத்தின் மூலமாக அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் கடந்த 23–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை குளிர்கால அறிவியல் முகாம் நடந்தது. இந்த முகாமில் மாணவ, மாணவிகளின் அறிவியல் வளர்ச்சியை தூண்டும் வகையில் அதனை சார்ந்த துறைகளிலிருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமின் நிறைவு நாளில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறையின் இயக்குனர் துவாரகாநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.