கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நேற்று பூண்டி ஏரியை வந்தடைந்தது.
செங்குன்றம்,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இங்கு மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கடந்த மார்ச் மாதத்தில் வாட்டி எடுத்த கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி முழுமையாக வறண்டது.
இதனால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அதிகாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் தேங்கி நின்ற தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இதனிடையே பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதி மற்றும் கண்டலேறு பகுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்தது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் ஓரளவும், கண்டலேறு அணையின் நீர் மட்டம் கணிசமாகவும் உயர்ந்தது. இருப்பினும் பூண்டியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க சாத்தியம் ஏற்பட வில்லை.
இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திராவுக்கு சென்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கடந்த மாதம் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி விதம் தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து கிருஷ்ணா நதிநீர் நேற்று அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 21 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 26.07 அடியாக பதிவானது. 1,012 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.