கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதாநகர் பிரதான சாலையில் வைஷ்ணவா மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து ஆயிரத்துக்கு

Update: 2018-01-02 22:45 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதாநகர் பிரதான சாலையில் வைஷ்ணவா மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறியதாவது:–

இக்கல்லூரியில் மாணவிகளுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவறைகள் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. கல்லூரி கேன்டீனில் உணவுகள் தரமாக இருப்பது இல்லை. கல்லூரியில் கலையரங்கம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் பாதியிலேயே நிற்கின்றது. இதனால் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவது இல்லை.

எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கல்லூரி கட்டணத்தை மட்டும் அதிகரித்து வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே தான் நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்காமல் கல்லூரி நிர்வாகம் அலட்சியம் காட்டினால் போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்