ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கடைகளுக்கு முன் கருப்பு கொடி கட்டி போராட்டம்
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கடைகளுக்கு முன் கருப்பு கொடி கட்டி போராட்டம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடந்தது
நாகர்கோவில்,
ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரியும், நாட்டில் நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள கடைகள் முன் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடந்தது.
இதே போல் குமரி மாவட்டத்திலும் வணிகர் சங்கங்களின் பேரவையில் இணைந்துள்ள கடைக்காரர்கள் நேற்று தங்களது கடைகளுக்கு முன் கருப்பு கொடியை கட்டி ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்டினர். நாகர்கோவிலில் பீச்ரோடு, செட்டிகுளம், கோட்டார் உள்பட 25 இடங்களில் உள்ள கடைகள் முன் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டேவிட்சன் செய்திருந்தார்.