ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண்ணை பெற்று 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் திருட்டு
ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை பெற்று 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் நூதன முறையில் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களிடம் சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரை சொல்லி அங்கிருந்து பேசுகிறோம். உங்கள் கணக்கில் பல்வேறு விவரங்கள் பதிவு செய்ய வேண்டி உள்ளது. எனவே உங்களது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கூறுங்கள் என்று கூறி அதை பெற்றுக்கொண்டு நூதன முறையில் திருட்டு நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நூதன திருட்டு சமீப காலமாக திருச்சி மாவட்டத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருச்சியில் ஒரு பெண் உள்பட 3 பேரிடம் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை பெற்று ரூ.1 லட்சம் நூதன முறையில் திருடப் பட்டது.
புகார்
இந்த நிலையில் இதே போன்று நேற்று 2 பேரிடம் நூதன திருட்டு நடந்து உள்ளது. அதன்படி திருச்சி உறையூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரிடம் சம்பவத்தன்று ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை பெற்று உள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்குள் அவரது செல்போனுக்கு அவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து 795 திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இதே போன்று பாரதி தெரு அம்மன் நகரை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் ஒரு வங்கி அதிகாரி என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை பெற்றுக்கொண்டு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.9,500 திருட்டு போய் இருப்பது தெரிந்தது. அதன்படி 2 பேரிடம் ரூ.30 ஆயிரத்து 295 நூதன முறையில் திருட்டு நடந்தது. இது குறித்து இருவரும் திருச்சி மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.