நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

Update: 2018-01-01 22:45 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சி 2 அல்லது 3 மாதங்களில் கலைந்து விடும் என்று கூறி வருகின்றனர். வழக்கமாக எதிர் கட்சியினர் கூறுவதையே இவர்களும் கூறி வருகின்றனர். முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வருகிற 2021–ம் ஆண்டுக்கு பின்னரும் சிறப்பாக தொடரும்.

தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திராவிட கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் எப்போதும் ஆட்சியில் இருக்கும். மற்ற அமைப்புகள் தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு வாய்ப்பே கிடைக்காது. ரஜினிகாந்த் நினைத்தது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்