கிருஷ்ணா நதிநீர், தமிழக எல்லையை வந்தடைந்தது
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், நேற்று காலை தமிழக எல்லை வந்தடைந்தது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக-ஆந்திர அரசுகள் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தை தீட்டின. இந்த திட்டத்தின்படி ஆந்திர அரசு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.
கடும் வெயில் காரணமாக கண்டலேறு அணை வறண்டதால் மார்ச் 22-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ஏப்ரல் 4-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதனால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு ஜூலை மாதத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் சாத்தியப்படவில்லை. இதற்கிடையில் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதி மற்றும் கண்டலேறு அணை பகுதியில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் கண்டலேறு அணை நிரம்பியது.
இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கடந்த 27-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் கடந்து நேற்று காலை 10 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.
வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்த தண்ணீர் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பூண்டி ஏரிக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 17 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
தற்போது கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கிடைக்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று கூறினர்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி நீர் மட்டம் 26.10 அடியாக பதிவானது. 1014 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.