10 சதவீத இடஒதுக்கீடு கேட்டு சீர்மரபினர் நலசங்கத்தினர் போராட்டம்
திருமங்கலம், சோழவந்தான் பகுதிகளில் சீர்மரபினர் நலசங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சோழவந்தான்,
தமிழக சீர்மரபினர் சங்கத்தின் சார்பில் 1979–ம்ஆண்டு பிறப்பித்த சட்டத்தை திரும்ப பெறவும், சீர்மரபினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு மத்திய அரசு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,200 உதவி தொகை வழங்குவதை போல தமிழக அரசும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தாலுகா நக்கலக்கோட்டை கிராமத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அதில் செல்வபிரித்தா, தியாகு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் ராஜேஸ்கண்ணா, அரவிந்த், கண்ணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல சோழவந்தான் அருகில் உள்ள மேலக்காலில் சீர்மரபினர் நலச்சங்க மாநில பொருளாளர் தவமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதேபோல குருவித்துறையில் சங்க நிர்வாகிகள் வெற்றி செல்வம், விவேக் ஆகியோர் தலைமையில் தேவர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மேலும் தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, விக்கிரமங்கலம், காடுபட்டி, உடன்காடுபட்டி, விக்கிரமங்கலம், மம்பட்டிபட்டி, முதலைக்குளம், நடுமுதலைக்குளம், கீழபட்டி, கொசவபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுகணக்கானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.