திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் டாஸ்மாக் அதிகாரி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் 202 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 63 பார்கள் உரிமம் பெற்று இயங்கி வந்தன. இந்த பார்களுக்கான ஏலம் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்றது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் 202 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 63 பார்கள் உரிமம் பெற்று இயங்கி வந்தன. இந்த பார்களுக்கான ஏலம் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்றது. இதில் ஏலத்தொகை அதிகமாக இருந்ததால், பார் ஏலம் எடுக்க உரிமையாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் 63 பார்களும் ஏலம் போகவில்லை. இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரை கூறியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் பார்கள் கடந்த மாதம் 31–ந் தேதி வரை செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பார்கள் செயல்படவில்லை. அதனால் 2–ந் தேதி (இன்று) முதல் திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பார்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.