முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க. பொதுக்கூட்டம்

முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து தொண்டியில் த.மு.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-01-01 22:15 GMT

தொண்டி,

முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து தொண்டி பாவோடி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் அபுதாகிர் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் தொண்டி சாதிக் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் பாரீஸ் வரவேற்றார்.

இதில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து பேசினார். அதனை தொடர்ந்து தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இளைஞர்களிடம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என்பது குறித்து மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது பேசினார்.

அதன் பின்னர் தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ம.ம.க. மாநில துணை பொது செயலாளர் மதுரை முகமது கவுஸ், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் அன்வர் அலி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசைன், தொண்டி ம.ம.க. செயலாளர் அப்துல் காதர், த.மு.மு.க. செயலாளர் ஜலால், துணை தலைவர் இபுராகிம், ம.ம.க. துணை செயலாளர் மைதீன், தெற்கு செயலாளர் மீரான், முன்னாள் வக்கீல் அணி செயலாளர் கலந்தர் ஆசிக், ஜமாத் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தொண்டி நகர் த.மு.மு.க. தலைவர் வக்கீல் முகமது ஜிப்ரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்