நாகர்கோவிலில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம்

நாகர்கோவிலில், ஆரோக்கியத்தை வலி யுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம் நேற்று நடந்தது.

Update: 2017-12-31 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் “ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சிகள் அவசியம்“ என்ற பெயரில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. ஓட்டத்தை மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகம் முன் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மணிமேடை சந்திப்பு வழியாக வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினார்கள். அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்திருந்தனர்.

இதனையடுத்து உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாகின் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் ஷேக் நூர்தீன் வரவேற்றார். காஜாமுகைதீன் வாழ்த்தி பேசினார். இஸ்ஹாக் நன்றி கூறினார். அதன் பிறகு உடற்பயிற்சியின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்