காஷ்மீரில் பணியாற்றி வந்த கோவில்பட்டி ராணுவ வீரர் மூச்சுத்திணறி சாவு
காஷ்மீரில் பணியாற்றி வந்த கோவில்பட்டி ராணுவ வீரர், மூச்சுத்திணறி இறந்தார். அவருடைய உடல் இன்று சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.;
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன்(வயது 33). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ஆனந்தலட்சுமிக்கும்(27) திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் அரிமோஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. ராஜேஷ் கண்ணன் 6 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து சென்றார்.
நேற்று முன்தினம் ராஜேஷ் கண்ணன், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதியில் பணியில் இருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த சக ராணுவ வீரர்கள் அவரை மீட்டு, ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது ராஜேஷ் கண்ணனின் உடல் ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள், ராஜேஷ் கண்ணனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு ராஜேஷ் கண்ணனின் பெற்றோர், மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இன்று(திங்கட்கிழமை) ராஜேஷ் கண்ணனின் உடல் சொந்த ஊரான சாத்தூரப்பநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ராணுவ வீரர் மரணம் அடைந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.