உலகையே கவனிக்க வைத்த பெண் இன்று...
புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியாகிரபிக்’ இதழ் அட்டைப்படத்தில் இடம்பெற்றதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஆப்கானிஸ்தான் அகதிப்பெண் தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து தாய் நாடு திரும்பியிருக்கிற அவருக்கு ஆப்கானிஸ்தான் அரசு சொந்த வீடு வழங்கியிருக்கிறது.
முப்பதாண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ் தானில் நடந்த சோவியத் படையெடுப்பின்போது அந்நாட்டை விட்டுப் பலர் வெளியேறினர்.
அப்போது தன் உடன்பிறப்புகள் மற்றும் பாட்டியுடன் இணைந்து நடைபயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்கு வந்து அகதியாக குடியேறியவர், ஷர்பட் குலா.
1985-ம் ஆண்டு வெளிவந்த நேஷனல் ஜியாகிரபிக் இதழின் அட்டையில் இவரின் புகைப்படம் வெளியிடப்பட்டபோது தன் பச்சை நிறக் கண்களால் உலக மக்களின் கவனத்தை ஷர்பட் குலா ஈர்த்தார். அப்போது இவருக்கு வயது 12.
அதன்பின் பாகிஸ்தானில் வாழ்ந்துவந்த இவருக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, போலி அடையாள அட்டை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஷர்பட் குலா கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டன.
அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய ஷர்பட் குலா, தனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், தான் ஹெபடைட்டிஸ் சி என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
ஷர்பட் குலாவின் கணவர் ஒரு மாதத்துக்கு முன்பு இதே நோயால் இறந்துள்ளதால், அப்பெண்ணின் உடல்நிலையையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கணக் கில் கொண்டு அவர் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, தாய் மண்ணான ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற ஷர்பட் குலாவுக்கு அந்நாட்டு அரசின் சார்பில் மூவாயிரம் சதுர அடி பரப்பளவில் சொந்தமாக வீடு மற்றும் மாதம் 700 டாலர் நிதியுதவி வழங்குவதாக ஆப்கன் அமைச் சரவை செய்தித் தொடர்பாளர் நஜீப் நங்யால் தெரிவித்துள்ளார்.
ஷர்பட் குலாவின் குடும்பத்துடன் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகளை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ் தானுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது.