உலகின் விலையுயர்ந்த வாசனை திரவியங்கள்
நம் உடலில் தோல் பகுதிகள், தலைமுடி மற்றும் ஆடைகள் மீது வாசனை திரவியங்கள் மற்றும் இயற்கை நறுமணப் பொருட்களை பயன்படுத்துவது பழங்காலந்தொட்டே நடைமுறையில் உள்ளன.
நம் உடலில் தோல் பகுதிகள், தலைமுடி மற்றும் ஆடைகள் மீது வாசனை திரவியங்கள் மற்றும் இயற்கை நறுமணப் பொருட்களை பயன்படுத்துவது பழங்காலந்தொட்டே நடைமுறையில் உள்ளன. அதிக விலை கொண்ட நறுமண திரவியங்களை உலகம் முழுக்க உள்ள பலரும் விரும்புகின்றனர். அத்துடன் ஒருவருக்கு ஒருவர் கவர செய்யும் விதத்தில் புதிய நறுமண வாசங்களை தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.
சிறந்த நறுமண தயாரிப்பாளர் என்பவர் சிறந்த ரசாயன கலப்புடன், பரவசமூட்டும் வாசத்துடன், மனங்கவரும் வாசத்துடன் தயாரித்து வழங்குகின்றனர். நவீன உலகிலுள்ள சமூகத்தினர் அதாவது ஆண், பெண் என இருபாலரும் தங்கள் நுகர்வு தன்மைக்கு ஏற்ற நறுமண திரவியங்களை வாங்குவதுடன் சந்தையில் கிடைக்கும் ஆடம்பர நறுமண திரவியங்களையும் தம் கரங்களில் அழகுடன் வைத்திருக்க விரும்புகின்றனர். எனவே அதிவிலையுயர்ந்த நறுமண திரவியங்களின் தேவை ஏற்பட்டது. மலர்களின் நறுமணங்களை வழங்கும் அதேவேளையில் அதனை உள்ளடக்கிய தயாரிப்பு பொருட்கள் என்பது சற்று விலை அதிகமாகவே உள்ளன. அந்த உலகின் மிக விலையுயர்ந்த சில வாசனை திரவியங்களை காணலாம்.
தங்கமயமான மில்லியன் டாலர் வாசனை திரவியம்
2011-ம் ஆண்டு தங்க ஆப்பிள் வடிவில் அமைக்கப்பட்டது மில்லியன் டாலர் பெர்ப்யூம் பாட்டில். இதிலுள்ள வாசனை திரவியம் என்பது மதிப்புமிகு பாட்டிலின் மூலமே அதிக கவர்தலை பெற்றுள்ளது. இந்த பாட்டிலில் சுமார் 2,909 விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டிலை உருவாக்க சுமார் 1,500 மிணி நேரம் செலவழிக்கப்பட்டுள்ளது. 14 கேரட் மஞ்சள் மற்றும் வெள்ளை தங்க பாட்டில் 183 மஞ்சள் சபையர் 2,700 வெள்ளை வைரங்கள், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் நாட்டு சிறப்பு கற்களும், ரூபி கற்கள் போன்றவை பதியப்பட்டுள்ளது. உலகின் விலையுயர்ந்த வாசனை திரவியங்களில் முதலிடம் பிடிப்பது இதுவே.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இம்பீரியல் மெஜஸ்டி
கிளைவ் கிரிஸ்டியனின் No.1 இம்பீரியல் மெஜஸ்டி என்ற பெர்பூயூம் உலகின் விலையுயர்ந்த வாசனை திரவியம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு அவுன்ஸ் பெர்ப்யூமின் விலை 12,729.89 டாலர். இந்த பாட்டிலில் 16.9 அவுன்ஸ் இருக்கும் அதன் மொத்த விலை 215,000 டாலர். கவர்ச்சிகரமான பாட்டில் கழுத்தி பகுதி 18 காரட் தங்க பட்டையுடன், 5 கேரட் வெள்ளை வைரத்துடன் சுற்றிலும் அழகுடன் காட்சி தருகிறது.
எகிப்திய பாணி வாசனை திரவியம்
“சேசர்டு டியர்ஸ் ஆப் தேபீஸ்” என்ற பெயரில் 1998-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பெர்ப்யூம் எகிப்திய பாணி வாசனை திரவியம் என்பதுடன் அதன் வடிவமும் எகிப்திய பிரமிடு போன்ற கண்ணாடி பாட்டில்தான். இதில் அம்பர், மல்லிகை, ரோஜா, எகிப்தியன் கேசி, மிர்ரா போன்றவை கலந்து உருவாக்கப்பட்ட வாசனை திரவியம். இதன் ஒரு அவுன்ஸ் விலை 6,800 டாலர்.
குறைந்த அளவே தயார் செய்யப்படும் சேனல் கிராண்ட்
ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவிலேயே தயார் செய்யப்படும் இந்த பெர்ப்யூம் நறுமண தயாரிப்பின் சிறப்பு நிறுவனமான கோகோ சேனல் வெளியீடு. ஒரு அவுன்ஸ் விலை 4,200 டாலர். சேனல் நிறுவனத்தின் பிரான்ஸ் விளைநிலங்களில் கிடைக்கும். சிறப்புமிகு மல்லிகை மற்றும் ரோஜாக்களில் மட்டுமே இந்த பெர்ப்யூம் தயார் செய்யப்படுகிறது. வீதிகளில் சாதாரணமாக பல பெர்ப்யூம் விற்பதையே நாம் வாங்க யோசிப்போம். விலையுயர்ந்த இந்த பெர்ப்யூம்களை கையில் தொட்டாலே நமது வாழ்வு நிறைவு பெற்று விடும்.