மாரியம்மாக்கள் மரிக்காமல் தழைக்கட்டும்!
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும், 2ஜி தீர்ப்பு பரபரப்புக்கும் இடையில், மனசாட்சிக்குப் பயந்து, மானம் மரியாதைக்கு அஞ்சி தன்னைத்தான் மாய்த்துக் கொண்ட மாரியம்மாள் எவ்வளவு பேரின் மனதில் நின்றிருப்பாள் என்பது தெரியவில்லை.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும், 2ஜி தீர்ப்பு பரபரப்புக்கும் இடையில், மனசாட்சிக்குப் பயந்து, மானம் மரியாதைக்கு அஞ்சி தன்னைத்தான் மாய்த்துக் கொண்ட மாரியம்மாள் எவ்வளவு பேரின் மனதில் நின்றிருப்பாள் என்பது தெரியவில்லை. கரூர் மாவட்டம் தெலுங்கப்பட்டியில் தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக பணியாற்றிவர் அவர். தனது தலைமையின் கீழ் நடக்கும் கணக்கு வழக்கில், ரூ.20 ஆயிரம் குறைந்து விடுகிறது. எவ்வளவோ முயன்றும், எங்கே கணக்கைத் தவறவிட்டோம், யாருடைய தவறு என்பது தெரியவில்லை. வேறு வழியில்லை என்பதால், தனக்குத் தெரிந்தவர்களிடம் அதே அளவுக்கான பணத்தை கடன் வாங்கி, கணக்கில் சேர்த்து பணியின் கணக்கை நேர் செய்துவிடுகிறார்.
ஆனாலும் மனம் உறுத்துகிறது. “கையாடல் நடந்துவிட்டதாக யாரும் தன்மீது குற்றம் சாட்டுவார்களோ?” என்று மனசாட்சி உலுக்கியதோ, கடனுடன் கடும் சொற்களும் காயப்படுத்தியதோ, எலி மருந்தை தின்று இறந்துவிட்டார்.மாரியம்மாள், இந்த விஷயத்தில் உயிரைவிடாமல் மன தைரியத்துடன் துணிந்து செயல்பட்டிருக்கலாம்.
ஆனால், நாட்டு நடப்புக்கும், மாரியம்மாளின் மரணத்துக்கும் இடையில்தான் நாட்டின் தலைவிதி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது யோசிக்கப்பட வேண்டியதே. அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் எழும்புகிறது, பரபரப்பாகிறது? பின்னர் ஏனோ அடங்கிவிடுகிறது? தங்கள் மீதான கறையை அவர்கள் “எப்படியெல்லாமோ” எதிர்கொண்டுவிடுகிறார்கள்? ஆனால் மனசாட்சி உள்ள மாரியம்மாக்கள்தான் உயிரை விட்டுவிடுகிறார்கள்.
நாம் நல்லதைத்தான் எதிர்பார்க்கிறோம், ஆனால் நல்லதை ஆதரிக்கிறோமா? என்பதுதான் தெரியவில்லை. இடைத்தேர்தல், 2ஜி தீர்ப்பு என பரபரப்பாகிவிடும் மக்கள், வாயைத் திறந்து தங்கள் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டுகிறார்கள். ‘இப்பவெல்லாம் அரசியல் இப்படித்தானே இருக்கிறது’ என எல்லாம் தெரிந்தவர்களாக தீர்மானமாகவே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தாங்கள் விமர்சித்த அரசியல்வாதிகளில் ஒருவரையே அவர்கள், தங்கள் தொகுதி நாயகனாக தேர்வு செய்திருப்பார்கள் என்பதும் திண்ணம். ஏன் அவர்கள் தங்கள் எதிர்ப்பை ஓட்டாக பதிவு செய்யவில்லை? மனசாட்சி கொண்ட மாரியம்மாக்கள் மரித்துவிடாமல் தழைக்கும்போதுதான், நாடும் செழிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து உண்டோ?
-துளி, அருணாசலபுரம்.