விண்ணேற்பு அன்னை ஆலய மேம்பாட்டு பணி முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய மேம்பாட்டு பணியை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2017-12-22 23:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஆன்மிகச் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுதேசி தர்‌ஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் புதுச்சேரி நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம் ரூ.1 கோடியே 38 லட்சம் மேம்படுத்தப்பட உள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. பணியை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் ஆலய பங்கு தந்தை குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தில் ஆலய வளாகத்தை சுற்றிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பாதையாக மாற்றப்படுவது, ஆலயத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்புற சுவர்களை நவீன கலவை முறையில் பூச்சு வேலை செய்து புதுப்பிப்பது, ஆலய முன்புறத்தில் பல்வேறு வடிவங்களில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட உள்ளன.

ஆலயத்தின் சுற்றுப்புறத்தை பராமரிக்கும் வகையில் குப்பை தொட்டிகளை அமைத்தல், ஆலயத்தின் சுற்றுச்சுவர் மற்றும் முதன்மை வாயிற்கதவுகளை புதுப்பிப்பது, ஆலய சுவர்களில் நவீன வண்ணக்கலவை கொண்டு வண்ணப்பூச்சு அடிப்பது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது, ஆலயத்தை சுற்றிலும் ஒளி விளக்குகள் மற்றும் புல் தரை அமைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் செய்திகள்