திருச்சி மாநகரை கலக்கிய 7 கொள்ளையர்கள் கைது நகைகள், மோட்டார் சைக்கிள் மீட்பு
திருச்சி மாநகரை கலக்கிய 7 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டன.
திருச்சி,
திருச்சி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தேவதானம் ரெயில்வே கேட் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருச்சி மேலரண்சாலை அந்தோணியார் கோவிலை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 20), வடக்கு தாராநல்லூர் சூரஞ்சேரியை சேர்ந்த அஜீத்(21), காமராஜர் நகரை சேர்ந்த அலங்கராஜ்(22) என்பது தெரியவந்தது.
அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் திருடுபோன மோட்டார் சைக்கிள் என்பதும், கோகுல்ராஜ், அஜீத், அலங்கராஜ் ஆகிய 3 பேரும் தான் தேவதானம் ரெயில்வே கேட் அருகே செல்போன் ரீசார்ஜ் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி மற்றும் 4 செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த மடிக்கணினி, செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதே போன்று பெரிய கடைவீதி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக மடிக்கணினியுடன் நின்று கொண்டிருந்த மேலரண்சாலை பட்டவர்த்ரோட்டை சேர்ந்த சக்திவேல்(24) மற்றும் வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த நாகராஜ்(21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் காந்தி மார்க்கெட் தாராநல்லூர் வசந்த நகரில் உள்ள தனியார் மருந்து குடோனில் இருந்து அந்த மடிக்கணினியை திருடியதும், அதனை விற்க பெரிய கடைவீதிக்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த மடிக்கணினியை கைபற்றிய போலீசார் சக்திவேல், நாகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த உறையூர் பாத்திமா நகர் அம்மன் தெருவை சேர்ந்த ஆலித்(24) என்பவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். ஆலித் மீது ஏற்கனவே திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அவர் கடந்த ஜூலை மாதத்தில் உறையூர் செட்டிபேட்டைத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைகளை கைப்பற்றிய போலீசார் ஆலித்தை கைது செய்தனர்.
இதே போன்று தென்னூர் பகுதியில் நின்று கொண்டிருந்த காஞ்சீபுரம் மாவட்டம் கோவளம் அன்சாரி நகரை சேர்ந்த சலீமை(45) தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தில்லைநகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நகைகள் திருடு போன வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரியவந்தது. அவரிடம் இருந்த 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து சலீமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாநகரை கலக்கி வந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தால் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.