ஈரோடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி இன்று நடக்கிறது.
ஈரோடு,
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதனால் கிருஷ்ணன் வீதி, பார்க் ரோடு, சடையப்பா ரோடு, சத்தி ரோடு, ஸ்டார் தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளின் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.