ஓட்டல் தொழிலாளியை கத்தியால் குத்தி வழிப்பறி
மதுரையில் ஓட்டல் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறித்த பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
மதுரை,
மதுரை ஆண்டாள்புரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 61), ஓட்டல் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஆண்டாள்புரம் ரெயில்வே பாலம் பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றார். அங்கு மாநகராட்சி பள்ளி சீருடை அணிந்த சிறுவர்கள் 4 பேரும், சீருடை இல்லாமல் ஒரு சிறுவனும் நின்றுள்ளனர்.
அதில் 3 பேர் அழகர்சாமியிடம் வந்து பையில் வைத்திருக்கும் பணத்தை கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, சீருடை அணியாத சிறுவன் கத்தியை எடுத்து அழகர்சாமி கையில் குத்தினான். அந்த நேரத்தில் மற்ற 2 பேர் அவர் சட்டை பையில் வைத்திருந்த 2 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்து கொண்டு தப்பி விட்டனர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் சிலர் தவறான வழியில் செல்கிறார்கள்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்தால், மாணவர்களை பற்றி தங்களிடம் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றும், அந்த மாணவர்கள் பள்ளி வருவதில்லை என்றும் கூறும் நிலை உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால், அந்த ஆசிரியர்கள் மீது கல்வீசி தாக்குதல் மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் நடக்கிறது.
எனவே மாணவர்களை ஆசிரியர்களும் கண்டிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அரசு மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.