எடைக்கு எடை பரிசு
கலிபோர்னியாவின் லின்வுட் பகுதியில், உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.
கலிபோர்னியாவின் லின்வுட் பகுதியில், உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். அதனால் லின்வுட் நகராட்சி, மக்களின் ஆரோக்கியத்திற்காக, உடல் எடையை குறைக்கும் வகையிலான போட்டிகளை நடத்தி வருகிறது. உடல் எடை அதிகம் இருப்பவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ரூ.2 ஆயிரத்தை போட்டிக் கட்டணமாக செலுத்தி இந்தப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், அதுபோக 12 வாரங்களில் கணிசமாக எடையைக் குறைக்க வேண்டும். அப்படி எடையைக் குறைப்பவர்களுக்கு 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. 12 வாரங்களில் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும், ஒரு டாலர் பரிசும் வழங்கப்படுகிறது.