அதிகாலை நேரத்தில் பாந்திரா ரெயில்நிலைய கேண்டீனில் தீ விபத்து

அதிகாலை நேரத்தில் பாந்திரா ரெயில்நிலைய கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2017-12-21 22:30 GMT

மும்பை,

அதிகாலை நேரத்தில் பாந்திரா ரெயில்நிலைய கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டது.

ரெயில் நிலையத்தில் தீ

மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் 4–வது பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் நேற்று அதிகாலை 4.25 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கேண்டீனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் ரெயில் நிலையத்தில் சில பயணிகளே இருந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

ரெயில் சேவை பாதிப்பில்லை

இதேபோல கேண்டீனில் தீ பிடித்தது உடனடியாக கவனிக்கப்பட்டதால், தீ மற்ற பகுதிகளுக்கு அதிகம் பரவுவதற்குள் அணைக்கப்பட்டது. எனவே இந்த விபத்தில் ரெயில்நிலைய பகுதிகள் எதுவும் சேதமடையவில்லை. பாந்திரா ரெயில் நிலைய கட்டிடம் நூற்றாண்டுகள் பழமையானது ஆகும்.

தீ விபத்து குறித்து மேற்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் கூறுகையில், கேண்டீனில் சிறிய அளவில் தான் தீப்பிடித்தது. உடனடியான தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, என்றார்.

மேலும் செய்திகள்