மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் இஸ்ரேல் நாட்டு முன்னாள் ராணுவ வீரர் கைது
மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் இஸ்ரேல் நாட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் இஸ்ரேல் நாட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சாட்டிலைட் போன்மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு கடல்மார்க்கமாக ஊடுருவி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்–இ–தொய்பா பயங்கரவாதிகள் அதிபயங்கர தாக்குதலை நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றத்திற்கு சாட்டிலைட் போன்களை பயன்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் சாட்டிலைட் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சாட்டிலைட் போன் வைத்திருக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
முன்னாள் ராணுவ வீரர் கைதுஇந்தநிலையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாம்ரெட் இடோ என்பவர் வந்து இறங்கினார். அவர் மும்பையில் இருந்து கோவா செல்ல இருந்தார். அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
இந்த சோதனையின் போது அவர் சாட்டிலைட் போன் வைத்திருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த சாட்டிலைட் போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் சாட்டிலைட் போனுக்கு தடை விதித்து இருப்பது தனக்கு தெரியாது என அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ரூ.25 ஆயிரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.