சிறுவாணி அணையில் இருந்து ஜூலை மாதம்வரை குடிநீர் எடுக்கலாம்
சிறுவாணி அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை கோவை நகருக்கு குடிநீர் எடுக்கலாம் என்று ஆய்வுக்குபிறகு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கேரள வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை, கோவை நகருக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணையில் மொத்தம் உள்ள 50 அடி நீர்மட்டத்தில் தற்போது 47 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து கோவை நகருக்கு தினமும் 8 கோடி லிட்டர்(80 எம்.எல்.டி.) குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் தமிழக குடிநீர் வடிகால்வாரிய இயக் குனர் சி.டபிள்யு. மகேஸ்வரன் நேற்று சிறுவாணி அணை யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். என்ஜினீயரிங் பிரிவு நிர்வாக இயக்குனர் மதியழகன், கண்காணிப்பு என்ஜினீயர் சொக்கலிங்கம், கோவை நிர்வாக என்ஜினீயர் உதய்சிங், ஆலோசகர் சம்பத் உள்பட பலர் இந்த ஆய்வின்போது உடன் சென்று இருந்தனர்.
அணைப்பகுதி, நீரேற்றும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்ட அவர், கேரள மாநில நிர்வாக என்ஜினீயர் மஜீத் மற்றும் அந்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருமாநில நல் எண்ணத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை நகருக்கு குடிநீர் வினியோகத்தை மேலும் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறுவாணி அணையில் இருக்கும் தற்போதைய நீரை வைத்து, கோவை நகருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இறுதிவரை குடிநீர் வழங்க முடியும் என்றும், மழை பெய்யாவிட்டாலும் இருக்கும் தண்ணீரை வைத்து குடிநீரை சீராக வழங்கலாம் என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இயக்குனர் மகேஸ்வரனிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் சாடிவயல் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் பார்வையிட்டார்.
சிறுவாணி அணையை தூர்வாருவது குறித்து அடுத்த கட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித் தனர்.