ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் காதலியுடன் பெங்களூருவில் பதுங்கலா?
கோவையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளை கும்பல் தலைவன் காதலியுடன் பெங்களூருவில் பதுங்கலா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமீத்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாகிவிட்ட கொள்ளை கும்பல் தலைவனான அரியானா மாநிலத்தை சேர்ந்த அஸ்லாம் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் கைதான 8 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) போலீஸ் காவல் முடிவடைகிறது. இதையடுத்து இன்று அவர்கள் 8 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் கைதான 8 பேரில் சிலரை மட்டும் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே, சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் ரூ.5½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்த 8 பேருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து நேற்று 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் அவர்கள் 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே கோவையை சேர்ந்த தனிப்படையினர் அவர்கள் 8 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த தகவல் குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-
கோவையில் உள்ள 2 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்துடன் மதுரை சென்ற கொள்ளையர்கள் 8 பேரும் அஸ்லாமிடம் கொடுத்து உள்ளனர். அவர் ரூ.27 லட்சத்தை எடுத்துவிட்டு, ரூ.3 லட்சத்தை மட்டும் அவர்களுக்கு கூலியாக கொடுத்து உள்ளார். பின்னர் மதுரையில் இருந்து அஸ்லாம் தனது காதலி கிரணுடன் பெங்களூருவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். பெங்களூரு அஸ்லாமுக்கு பழக்கமான இடம் என்பதால் அங்கு அவர் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே அஸ்லாம் மற்றும் அவருடைய காதலியின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் எங்கு தலைமறைவாக இருக்கிறார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிப்படையை சேர்ந்த போலீசார் அஸ்லாமின் சொந்த ஊருக்கும் சென்று விசாரணை செய்ய உள்ளனர். எனவே விரைவில் அவர் சிக்கிவிடுவார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மேலும் கைதான 8 பேரை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்குள்ள ஏ.டி.எம். எந்திரங்களை தாங்கள் உடைத்து, பணத்தை கொள்ளையடித்தது எப்படி? கண்காணிப்பு கேமராக்களில் ரசாயன நுரையை அடிக்கும் ஸ்பிரேயை கேமராவில் அடித்தது, தொழில் நுட்பங்களை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து கொள்ளையர்கள் நடித்து காட்டினார்கள். அவர்கள் கூறியதை பார்த்து ஏ.டி.எம்.களை உடைக்க இவ்வளவு நவீன தொழில்நுட்பங்கள் உள்ளதா? என்று போலீசாரே வியந்து விட்டனர்.
ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டதே இந்த வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால், உடைக்கப்பட்ட அந்த எந்திரங்களை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர். அதுபோன்று அவற்றை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.