சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா இன்று தொடங்குகிறது

மாமல்லபுரத்தில் சுற்று லாத்துறை சார்பில் நாட்டியவிழா இன்று தொடங்குகிறது. இந்த விழா ஒரு மாதம் நடக்கிறது.;

Update: 2017-12-21 22:15 GMT
மாமல்லபுரம்,

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஆண்டு தோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் இன்று மாலை 5½ மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் வரவேற்று பேசுகிறார்.

கலை நிகழ்ச்சிகள்

சுற்றுலாத்துறை செயலாளர் அபூர்வவர்மா முன்னிலை வகித்து பேசுகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நாட்டிய விழாவை தொடங்கி வைத்து பேசுகின்றனர். முடிவில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சின்னசாமி நன்றி கூறுகிறார்.

விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சுபுடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

மேலும் செய்திகள்