கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-21 22:30 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் திருமலை சங்கு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் குமரவேலு முன்னிலை வகித்தார். இதில் மாநில பொறுப்பாளர் திருமலை பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஆன்-லைன் சான்று வழங்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பெண் கிராம நிர்வாக அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டா மாறுதல் இனங்களில் உட்பிரிவு மற்றும் நகர்புறங்களில் கிராம நிர்வாக அலுவலருடைய ஒப்புதல் இல்லாமல் பட்டா மாற்றும் நிலையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முடிவில் வட்ட பொருளாளர் குமரன் நன்றி கூறினார்.

தரங்கம்பாடி

இதேபோல் தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பு செயலாளர் சிவராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட பொருளாளர் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் திருவிளையாட்டம் சரக செயலாளர் சவுரிராஜ் நன்றி கூறினார்.

சீர்காழி

சீர்காழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் பவளச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் நவநீதன், மாவட்ட துணை தலைவர் ஜாகீர்உசேன், மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், வட்ட துணை தலைவர்கள் மணிமாறன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்