தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் ரூ.48¾ லட்சம் மதிப்பில் கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டங்கள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் ரூ.48¾ லட்சம் மதிப்பில் கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டங்களை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

Update: 2017-12-21 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் ரூ.48¾ லட்சம் மதிப்பில் கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டங்களை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

ரூ.48¾ லட்சம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் கடலோர சமுதாய மேம்பாட்டு திட்டங்கள் தொடக்க விழா நேற்று காலை குரூஸ்புரம் புனிதவளனார் நற்பணி மன்றத்தில் நடந்தது. வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, ரூ.48 லட்சத்து 89 ஆயிரத்து 360 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் நடராஜன், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைமுக செயலாளர் சாந்தி வரவேற்று பேசினார்.

இந்த திட்டத்தின் கீழ் திரேஸ்புரத்தில் மீன் ஏலமிடுவதற்கான கொட்டகை அமைத்தல், படகு கட்டும் தூண் அமைத்தல், மீன்பிடி பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல், மீன் ஏலமிடும் பகுதியில் குப்பை தொட்டி அமைத்தல், மருத்துவ முகாம், சுகாதார கருத்தரங்கு, இளம்வயது பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்குதல், ரத்த பரிசோதனை முகாம், ரத்ததானம், 1 முதல் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள், ஆடை வடிவமைப்பு பயிற்சி, மீன் உபபொருட்கள் தயாரிப்பு பயிற்சி, மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் முதலுதவி பயிற்சி, கடற்கரை தூய்மை படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தயாராக...

விழாவில் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் பேசும் போது, எந்த ஒரு நிறுவனமும் அமைக்கப்படும் இடத்தில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மிகவும் பழமையான துறைமுகம். இது மக்களுக்கு பலவகையிலும் உறுதுணையாக இருந்து உள்ளது. தற்போது துறைமுகம் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கு சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது தவிர மக்களுக்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தாலும், அதனை செயல்படுத்த தயாராக உள்ளோம் என்று கூறினார். விழாவில் துறைமுக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தாகூர் டிரோஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்