காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவதுபோல் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க மாவட்ட செயலாளர் தவமணி, மாவட்ட இணைச்செயலாளர் பிரேமா, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச்செயலாளர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜலெட்சுமி நன்றி கூறினார்.