நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து
மதுரை அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பாலம் கட்டி தர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருமங்கலம்,
மதுரை அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமம் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இந்த கிராமத்தில் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கிராமத்தில் ஒரு பக்கம் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. அதையொட்டி விரிவாக்க பகுதியான பாண்டியன் நகர், துணை சுகாதார நிலையம் உள்ளது.
மற்றொரு பக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. சிவரக்கோட்டை கிராமத்தையொட்டி நேசநேரி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊருக்கு நடுவே நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. அதன் வழியே நிமிடத்திற்கு 40 வாகனங்களுக்கு மேல் கடந்து செல்கின்றன. கிராம மக்கள் ரோட்டை கடக்க உயிரை கையில் பிடித்துகொண்டு கடக்கும் நிலை உள்ளது.
குறிப்பாக மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளும் ரோட்டை கடந்து செல்ல நீண்டநேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் கடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, கிராமத்தை சேர்ந்த சிலர் கூறியதாவது, கிராமத்தின் நடுவே நான்கு வழிச்சாலை போடும்போதே ரோடு போடும் அதிகாரிகளிடம் ரோட்டை கடக்க ஏதாவது ஒரு இடத்தில் பாலமோ அல்லது சுரங்க பாதையோ அமைத்து கொடுங்கள் என கேட்டும் அமைத்து தரவில்லை. நான்கு வழிச்சாலை என்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் வருகிறது. அதனால் கிராமமக்கள் ரோட்டை கடக்க கடும் சிரமமாக உள்ளது.
அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனில்லை. எனவே ரோட்டை கடக்க பாலம் அல்லது மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.