அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை கருணாஸ் எம்.எல்.ஏ. புகார்
திருவாடானை யூனியனில் மக்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க செல்போனில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்துள்ளார்.
தொண்டி,
திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். திருவாடானை யூனியனுக்கு உட்பட்ட சி.கே.மங்கலம், ஓரிக்கோட்டை, சாந்திபுரம், அல்லிக்கோட்டை, கட்டவிளாகம், கலியநகரி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சாந்திபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தங்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
அதன்பின்னர் மங்கலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர் அங்கு பணியில் இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி நிலை குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதா எனக்கேட்ட அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சைக்கிள் நிறுத்தம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார்.
அதன்பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- திருவாடானை யூனியனில் உள்ள ஆறுகளில் அதிகாரிகள் உடந்தையுடன் மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கட்டவிளாகம் கிராமத்தில் செயல்பட்ட அரசு குவாரியில் எதிர்ப்பையும் மீறி சட்டவிதிகளுக்கு புறம்பாக மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் கூகுடி, நீர்க்குன்றம், கட்டவிளாகம், அறநூற்றிவயல் கிராமங்களில் நீர் ஆதாரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, திருவாடானை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்ற நிலையால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசின் முதன்மை செயலாளர் ஆகியோரிடம் நேரில் புகார் அளிக்க உள்ளேன். தொகுதியில் உள்ள மக்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த அதிகாரிகளை செல்போனில் தொடர்புகொள்ளமுடியவில்லை.
தொடர்பு கொண்டால் ஒரு அதிகாரியும் போனை எடுப்பதில்லை. பின்னர் எப்படி அதிகாரிகளிடம் குறைகளை கூறுவது. எம்.எல்.ஏ.வுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் நிலை மிகவும் பரிதாபம் தான். நான் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்யும்போது பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேச அதிகாரிகளை அழைத்தால் யாரும் வருவதில்லை.
இதுபற்றி தமிழக அரசின் முதன்மை செயலாளரிடம் புகார் அளிக்க உள்ளேன். மேலும் திருவாடானை யூனியன் கலியநகரி கிராமத்தில் அரசு அனுமதியின்றி இறால் பண்ணைகள் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுஉள்ளது. இதற்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அதிகாரிகள் உடந்தையுடன் புதிதாக சாலை அமைக்கப்பட்டுஉள்ளது. இதனை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.