ராமேசுவரத்திற்கு ஜனாதிபதி வருகை: ஹெலிகாப்டர் தளத்தில் அதிகாரிகள் ஆய்வு
மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.;
பனைக்குளம்,
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் வருகை தரஉள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் இவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரம் செல்கிறார்.
அதனை தொடர்ந்து அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மற்றும் அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
ஜனாதிபதி மண்டபம் வருவதை தொடர்ந்து முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மண்டபம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மஞ்சுநாத், இளநிலை உதவியாளர் முனியசாமி ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மண்டபம் முகாம் பகுதியில் சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.