புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளர் அய்யர் தலைமை தாங்கினார். மன்சூர் அலி, பூமணி, இன்பராஜ், ராஜலிங்கம், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.