காஞ்சீபுரம் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

காஞ்சீபுரம் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2017-12-20 22:15 GMT
காஞ்சீபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம், மாங்கால்கூட்ரோடு அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 29). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனியா (23). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண முடிந்த இவர்களுக்கு அரிஸ் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், சோனியா குழந்தையை தூக்கிக்கொண்டு காஞ்சீபுரம் அடுத்த களக்காட்டூர் கீழண்டை வீதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு வந்த வெங்கடேசன் மற்றும் அவரது தாயார் செல்லம்மாள் (48) ஆகியோர் சோனியாவை அடித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சோனியா களக்காட்டூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து சென்று சோனியாவின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சோனியாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜூ விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்