கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்
பனப்பாக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல். திருமாவளவன் பேசினார்.
பனப்பாக்கம்,
பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்த ரேவதி, தீபா, சங்கரி, மனிஷா ஆகிய 4 மாணவிகள் கடந்த மாதம் 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுடைய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களுடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் சாவுக்கு நீதி விசாரணை கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பனப்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் 4 பேரும் நீண்டநாள் வாழவேண்டியவர்கள். இந்த மேடையில் அவர்களுடைய படங்களை திறந்துவைத்தபோது, அவர்களின் பெற்றோர் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட பிரச்சினையா, குடும்ப சுமையா, கடன் தொல்லையா அல்லது வேறு என்ன நெருக்கடி இருக்க முடியும். அவர்கள் பட்டாம்பூச்சியாக பறந்து திரியவேண்டிய பருவம். 10-ம் வகுப்பில் 4 பேரும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
அவர்கள் 4 பேரும் ஒன்றாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனஉளைச்சல் என்றால் அதற்கு காரணம் ஒன்று குடும்பம், மற்றொன்று பள்ளியாகத்தான் இருக்க முடியும். 4 குடும்பங்களும் வெவ்வேறு பின்னணியை கொண்டது. 4 மாணவிகளும் ஒன்றாக தற்கொலை செய்துகொள்ள குடும்பசூழ்நிலை காரணமாக இருக்கவாய்ப்பில்லை. தனிப்பட்ட முறையில் அவர்களுடைய நடவடிக்கை, நடத்தைதான் சாவுக்கு காரணம் என்றால் 4 பேருக்கும் நடத்தை தொடர்பான ஒரே பின்னணி இருக்கமுடியாது. இந்த சம்பவத்திற்கு சமூகம் சொல்லும் குற்றச்சாட்டு நடத்தை சரியில்லை என்பதுதான். அது மாணவியாக இருந்தாலும் சரி, குமரியாக இருந்தாலும் சரி, திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி இதே குற்றச்சாட்டுதான் வரும்.
அவர்கள் செல்போன் பயன்படுத்தினார்கள், ஆண்களுடன் தொடர்பிருந்தது என்பதை தவிர வேறு எதையும் இந்த சமூகம் சொல்லாது. அவர்கள் சொல்வது உண்மைஎன்றால் ஒரேமாதிரியான பின்னணி எப்படி இருக்கமுடியும். இந்த மாணவிகளுக்கு ஒரேமாதிரியான தொல்லையை வகுப்பாசிரியர்கள் கொடுத்துள்ளனர். மற்ற மாணவிகள் முன்பு கேவலமாக பேசினால் மனம் காயப்படவாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் 4 மாணவிகளும் ஒரேமாதிரியான முடிவை எடுக்கமுடியும். இதற்கு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும்தான் பொறுப்பு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு என்ன தயக்கம்.
2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தால் சரியாகிவிடுமா? முழுமையாக விசாரணை நடத்தி தற்கொலைக்கான பின்னணியை அறியவேண்டும். தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1 கோடி வழங்கவேண்டும், பெற்றோருக்கு அரசு வேலை, தலா 2 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கவுதம், சோளிங்கர் தொகுதி செயலாளர் வெற்றிவளவன், மாநில நிர்வாகிகள் தமிழ்மாறன், ரவிச்சந்திரன், வைகை செல்வன், பனப்பாக்கம் நகர செயலாளர் லோகநாதன், நிதி செயலாளர் தனஞ்செழியன், துணை செயலாளர்கள் செந்தமிழ் செல்வம், விநாயகம், நெமிலி ஒன்றிய செயலாளர் அரசு மற்றும் ஏழுமலை, வெங்கடேசன், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.