குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம்,
குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில், பொருளாளர் சங்கரன், வட்ட துணை செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட அளவில் மாறுதல் வழங்க வேண்டும், கூடுதல் கிராம பொறுப்பூதியம் வழங்க வேண்டும், ஆன்லைன் செலவினம் மற்றும் லேப்டாப், மோடம் வழங்க வேண்டும், நகர உட்பிரிவு மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரைகளை கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், முத்துமாரி, வெங்கடாஜலபதி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.