பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 14–ந்தேதி முதல் ஆன்–லைன் பரிந்துரையை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 14–ந்தேதி முதல் ஆன்–லைன் பரிந்துரையை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரஸ்மேவ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்ட செயலாளர் மாயாவு, பொருளாளர் வினு கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.