ஒகி புயலில் சிக்கி கேரளாவில் மாயமான கூழையார் மீனவர்கள் 2 பேர் சொந்த ஊர் திரும்பினர்

ஒகி புயலில் சிக்கி கேரளாவில் மாயமான கூழையார் மீனவர்கள் 2 பேர் சொந்த ஊர் திரும்பினர்

Update: 2017-12-20 22:45 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான தொடுவாய், கூழையார், வானகிரி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் ஏற்பட்ட ஒகி புயலில் சிக்கி மாயமானார்கள். கடல் சீற்றத்தால் தத்தளித்த மீனவர்கள் சிலர் தீவுகளில் கரை சேர்ந்து, பின்னர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இந்நிலையில் கடந்த 26-ந் தேதி கூழையார் மற்றும் வானகிரி கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க கேரளா சென்ற 5 மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமானார்கள். அதில் மும்பையில் கரை சேர்ந்த ஏழுமலை, தமிழ்பாலன், சங்கர் ஆகிய 3 பேர் கடந்த 15-ந் தேதி இரவு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோல் மும்பையில் கரை சேர்ந்த கலைமணி (வயது 30), வெங்கடேசன் (53) ஆகிய 2 பேரும் நேற்று சொந்த ஊரான கூழையாருக்கு வந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். 

மேலும் செய்திகள்