பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பைரவநாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
காலியாக உள்ள 1,000 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வில் தேக்க நிலையை மாற்றி மருந்தாளுநர்களுக்கு கூடுதலாக 3 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். 42 மருந்து கிடங்கிற்கு தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்கிட வேண்டும். மருத்துவக்கோடு விதிகளின் படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மருந்தாளுனர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதில் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
இதேபோல திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி கருணாநிதி, தலைமை மருந்தாளுனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சத்துணவு சங்க மாவட்ட தலைவர் ரவிதாஸ், தொழில்நுட்ப ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட மகளிரணி உறுப்பினர் ஹேமா, நீதித்துறை ஊழியர் சங்க வட்ட தலைவர் மதியழகன், அரசு ஊழியர் வட்ட இணை செயலாளர் அம்பேத்கர், மருத்துவர்கள் செல்வராணி, ராதிகா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.