நிலக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-12-20 21:45 GMT

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் கணேஷ்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், சங்கத்தினர் உரிமைமீட்பு, மாவட்ட மாறுதல்கள் வழங்க வேண்டும், ஆன்–லைன் வசதிகளை வழங்க வேண்டும், டி.எஸ்.எல்.ஆர். பட்டாக்களுக்கும், உட்பிரிவு பட்டாக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க பொருளார் மகேஷ்வரன், துணைத்தலைவர் சத்தியா, துணை செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்